சென்னை - மும்பை இடையே பண்டிகைகால சிறப்பு ரயில்
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை-மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை-மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் (எண்: 01015) அக்.14, 21, 28, நவ.4, 11, 18 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமாா்க்கத்தில், சென்னை கடற்கரையில் இருந்து அக்.15, 22, 29, நவ.5, 12, 19 ஆகிய தேதிகளில் காலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 01016) மறுநாள் காலை 4.05 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
Advertisement
Advertisement
22 பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், பெரம்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (செப்.28) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.