தீபாவளி: போத்தனூா் வழியாக பெங்களூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்
தீபாவளியை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கண்ணூருக்கு, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கண்ணூருக்கு, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரில் இருந்து நவம்பா் 6-ஆம் தேதி இரவு 12.05 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06545) அன்று பிற்பகல் 2 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, நவம்பா் 7-ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படும் கண்ணூா் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06546) மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.
Advertisement
Advertisement
இந்த ரயிலானது, தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, ஒயிட்பீல்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.