FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் டிக்கெட்டுகள் சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்ததைப் பற்றி...

சிறப்பு ரயில். - கோப்புப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி, தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.

ரயில் டிக்கெட் முன்பதிவுகள் வழக்கமாக 60 நாள்களுக்கு முன்பே தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி காலத்திற்கான ரயில் பயண முன்பதிவுகள் செய்யாதவர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கும், தாம்பரத்திலிருந்து தென்காசிக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (நவ. 3) காலை தொடங்கியது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.

Advertisement

Advertisement

வருகிற நவ. 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06151) மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குனேரி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது.

மறு வழியாக வருகிற நவ. 9- ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06152) மறுநாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

வருகிற நவ. 7-ஆம் தேதி (சனிக்கிழமை) தாம்பரத்திலிருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06049) மாலை 4.45 மணிக்கு தென்காசியை சென்றடைகிறது.

மறு வழியாக செங்கோட்டையில் இருந்து வருகிற நவ. 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06050) மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சந்திப்பு, மதுரை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது.

summary

For the Diwali festival, tickets for the special trains announced by Southern Railway—running between Chennai Egmore and Kanyakumari, and between Tambaram and Tenkasi—sold out within minutes of becoming available.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments