FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை தவிர்த்த அமைச்சர் ஆனந்த்! ஏன்?

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் ஆனந்த் பற்றி..

26 செப்டம்பர் 2026, 12:00 pm IST
அமைச்சர் ஆனந்த்
பகிர்:

தாராபுரம் செல்லுவதற்காக சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வந்தடைந்த தமிழக அமைச்சர் ஆனந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார்.

தமிழகத்தில் இடைதேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தாராபுரம் இடைதேர்தலில், தமிழக வெற்றிக்கழக வேட்பாளரை ஆதரித்து, வாக்கு சேகரிப்பதற்காக தமிழக அமைச்சர் ஆனந்த் சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

Advertisement

Advertisement

கோவை விமான நிலையத்தில், இருந்து சாலை வழியில், அவர் தாராபுரம் புறப்பட்டுச் சென்றார்.

கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலரும் சால்வைகள் அணிவித்தும், மலர் கொத்து அளித்தும், வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவருடன் அனைவரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அனைவரது வரவேற்பையும் ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஆனந்த் காரில் ஏறி அமர்ந்தபடி கைகளை அசைத்து, விடைபெற்றுச் சென்றார்.

முன்னதாக செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் விடைபெற்று சென்றார் ஆனந்த். ஏன் திடீரென செய்தியாளர்களை தவிர்த்துவிட்டுச் சென்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments