FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்சாரத் துறை அமைச்சர் நிகழ்ச்சியில் மின்வெட்டு: நிர்மல்குமார் விளக்கமும் மு.க.ஸ்டாலின் விமர்சனமும்!

அரசுக் கல்லூரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சாரத் துறை நிர்மல் குமார் அளித்த விளக்கம் பற்றி...

26 செப்டம்பர் 2026, 3:47 pm IST
மு.க. ஸ்டாலின் | நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

மதுரையில் அரசுக் கல்லூரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சாரத் துறை நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மாநிலத்தில் சமீபமாக அதிகளவில் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில், மின்சாரத் துறை அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டமளிப்பு விழா நடந்த கல்லூரி வளாகத்தில் ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் இயக்கப்பட்டதாகவும், ஒரு ஜெனரேட்டரிலிருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சாரம் மாற்றப்பட்டபோது 5 வினாடிகள் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதனிடையே, அமைச்சரின் நிகழ்ச்சியில் மின்வெட்டு குறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது, தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.

இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ஆய்வு செய்யவில்லை. ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார்போல என்று விமர்சித்துள்ளார்.

summary

Minister Nirmal Kumar explains the power outage at the government college event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments