FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர் சூட்டப்படுகிறது.

7 வினாடிகள் முன்பு
பாக்யராஜ் - file photo
பகிர்:

நுங்கம்பாக்கத்தில், இயக்குநரும், நடிகருமான மறைந்த பாக்யராஜ் இல்லம் இருக்கும் சாலையின் பெயரை விரைவில் பாக்யராஜ் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுங்கம்பாக்கத்தில், இயக்குநர் பாக்யராஜ் இல்லம் இருக்கும் லேக் ஏரியா, 5வது குறுக்கு சாலையின் பெயரை திரைக்கதை மன்னர் இயக்குநர் கே. பாக்யராஜ் சாலை என பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், இயக்குநர் பாக்யராஜ் இல்லம் இருக்கும் சாலையை நேரில் சென்று ஆய்வு செய்து இது குறித்து பரிந்துரையை அளித்திருந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

உரிய அனுமதி கிடைக்கப்பெற்றதும், புதிய பெயர் சாலை அடங்கிய பலகை அவ்விடத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments