முதல்வர் விஜய் ஏன் இதை அனுமதிக்கிறார்? மேயர் பிரியாவுக்கு கனிமொழி ஆதரவு!
மேயர் பிரியா ராஜனுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்...
மேயர் பிரியா ராஜனுக்கு எதிராகத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கப்படும் சர்ச்சைகளை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை மேயர் பிரியா, தான் முடி வெட்டிக்கொண்டது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மேயர் பிரியா, தான் பர்கர் சாப்பிட்டாலும் பிரச்னை ஆகிறது. முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னை ஆகிறது. தான் எடுக்கும் என்னுடைய தனிப்பட்ட விருப்பங்கள்கூட கேள்விக்குட்படுத்தப்பட்டு அவை ஆராயப்படுவதாகத் தெரிகிறது என்று தனது ஆதங்கத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
தான் ஒரு பெண் என்பதாலோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இப்படி நடக்கிறதா? தன்னுடைய பிரச்னைகளில் மட்டும், பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்பவர்களும் எங்கே மறைந்துவிடுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மேயர் பிரியாவுக்கு ஆதரவாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி,
"பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தொடர்ந்து விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படக் கூடாது. ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அரசியலில் நுழைவதே சவாலானது. அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், அரசியலில் நுழைவது அதைவிடக் கடினமானது. இத்தகைய தடைகளைத் தகர்த்து முன்னேறும் பெண்களைக் குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேயர் பிரியா ராஜனுக்கு எதிராகத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கப்படும் சர்ச்சைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
'எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டேன்' என்று முதல்வர் விஜய் கூறுகிறார். அப்படியிருக்க, மேயர் பிரியா மீதான இத்தகைய தாக்குதல்களைத் தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை அவர் ஏன் அனுமதிக்கிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.
Why does Chief Minister Vijay allow this, Kanimozhi supports Mayor Priya
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.