FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்ஸ்டாவில் தங்க, பண மழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!

இன்ஸ்டாவில் தங்க, பணமழை கொட்டும் விடியோ வெளியிட்ட கன்னியாகுமரி பெண் வீட்டில் திருட்டு..

26 செப்டம்பர் 2026, 10:21 am IST
தங்க நகைகள் - பிரதி படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மதுமிதா என்ற பெண், தங்கள் வீட்டில் இருக்கும் அதீத நகை மற்றும் பணத்தை வெளிப்படையாக விடியோ வெளியிட்டு லைக்குகளை வாரிக்குவித்து வந்த நிலையில், அனைத்துத் தகவல்களையும் இன்ஸ்டா மூலம் நோட்டமிட்ட திருடர்கள் போட்ட பிளான் பக்காவாக ஹிட் அடித்திருக்கிறது.

குழந்தை மீது பணத்தை வாரிக் கொட்டுவது, வீடு முழுக்க ரூபாய் நோட்டுகள் குவிந்து கிடப்பது, கழுத்து முழுவதும் நகைகளை அணிந்து கொள்வது, ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செல்வது என அனைத்தையும் விடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு அசத்தி வந்தார்.

ஆனால், அவரை திருடர்கள் ஒரு சில வினாடிகளில் அசத்தியிருப்பதுதான் பரபரப்பான செய்தியாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை மாலை, குடும்பத்துடன் ஷாப்பிங் புறப்படுவதாக விடியோ வெளியிட்டிருந்தார். ஷாப்பிங் செய்வதையும் விடியோ எடுத்திருப்பார். ஆனால் அதனை வீட்டுக்கு வந்து வெளியிடுவதற்குள் நிலைமை மாறிவிட்டது.

காரணம், அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் 120 சவரன் தங்க, வைர நகைகளும் 50 ஆயிரம் ரொக்கமும் திருடுபோயிருந்தது.

மதுமிதாவின் கணவர் வினோத்குமார் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்கள் கடைக்குச் சென்று திரும்புவதற்குள் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், அலமாரிகளின் பூட்டுகளை உடைத்து அதிலிருந்த நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள்.

இந்த விசாரணையில், மதுமிதாவின் இன்ஸ்டா பக்கமும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பார்த்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி. காரணம், வீட்டில் இருக்கும் அனைத்து பீரோ, அலமாரி என அனைத்தையும் அவர் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் தங்க நகைகள் வாங்குவதையும், எங்கே சென்றாலும் அதையும் விடியோ எடுத்து பதிவிட்டு, திருடர்களுக்கு அனைத்துத் தகவல்களையும் விடியோ மூலம் கொடுத்து வாருங்கள் வாருங்கள் என்று மறைமுகமாக அழைப்பு விடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

summary

Woman flaunted a shower of cash on Insta; thieves swooped in and snatched it!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments