தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது குறித்து...
தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழாவில் அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:
தேர்தல் அரசியலில் எடுக்கும் நிலைப்பாட்டை வைத்து ஒரு இயக்கத்தை தீர்மானித்துவிடக் கூடாது, அது சில அற்பர்கள் செய்யும் மதிப்பீடு.
Advertisement
Advertisement
நாம் ஒரு கணக்குப்போட்டால், காலம் ஒரு கணக்கு போடுகிறது. காலத்தின் மீதுதான் இந்தப் பழியை சுமத்த முடியும், யார் மீதும் சுமத்த விரும்பவில்லை. ஆனால், ஒன்று சொல்ல முடியும், நாங்கள் பதவிக்காகவோ, அதிகார வேட்கைக்காகவோ அணிமாறும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
2003 ஆம் ஆண்டே எம்எல்ஏ பதவியை உதறிவிட்டு வந்தவன் நான். பதவியின் பிடிப்பு ஏற்படவில்லை, அதனால் வெளியே வந்தேன்.
திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் மட்டுமல்ல, இடம் பெற்ற கட்சிகள் நீடிக்க முடியாமல் போய்விட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் நீடிக்கவில்லை. எங்களாலும் நீடிக்க முடியவில்லை.
நாம் இந்த அணியில் இடம்பெறாமல் போயிருந்தால், தவெகவை வலதுசாரி சக்திகள் ஆக்கிரமித்துக் கொள்வதற்கான சூழல் இருந்தது, நாங்கள் ஆதரவு தருகிறோம், நீங்கள் ஆட்சி அமையுங்கள், தவெக அதற்குத் தயாராக இல்லை. தவெகவை அப்படி விட்டுவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வோடு விசிக இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
வலதுசாரிகள் எந்த சூழலையும் தமதாக்கிக்கொள்ளக் கூடாது, அதை தடுக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அமைச்சரவையில் இடம்பெறும் நம் கனவு நனவாகிட்டது. இனி வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் நீடிக்கும்” என்றார்.
Viduthalai Chiruthaigal Katchi leader Thirumavalavan has stated that coalition rule will prevail in Tamil Nadu from now on.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.