FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூர் பலி: நெஞ்சில் என்றும் நீங்காத வலி- அமைச்சர் நிர்மல் குமார்

கரூர் பலி நிகழ்ந்து முதலாண்டு நினைவு நாளையொட்டி அமைச்சர் நிர்மல்குமார் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி....

27 செப்டம்பர் 2026, 11:40 am IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

கரூர் பலி நிகழ்ந்து முதலாண்டு நினைவு நாளையொட்டி அமைச்சர் நிர்மல் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், கரூர் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கரூர் துயரச் சம்பவத்தில் நம்மை விட்டு பிரிந்த 41 உயிர்களின் இழப்பு என்றும் ஆறாத எங்களின் வாழ்நாள் துயரம்…

Advertisement

Advertisement

அவர்களோடு பல கனவுகளும், எதிர்பார்ப்புகளும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் உலகமும் போய்விட்டது.

அன்று ஏற்பட்ட அந்த துயரம், எங்கள் நெஞ்சில் என்றும் நீங்காத வலி.

நம்மை விட்டு பிரிந்த அந்த 41 உயிர்களின் நினைவுகள் என்றும் எங்களுடன் வாழும்.

அவர்களை என்றும் மறக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி முதல்வரும், தவெக தலைவருமான விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

summary

On the occasion of the first-year remembrance day of the Karur tragedy, Minister Nirmal Kumar has expressed his condolences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments