FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆர்டிஐ: சட்டம் - ஒழுங்கு தகவல் பெறுவதில் கட்டுப்பாடு! தமிழக அரசு அரசாணை!

சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்கள் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

48 வினாடிகள் முன்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - கோப்புப்படம்
பகிர்:

பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) கீழ் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு, இனி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பதிலளிக்கப்படாது என்று, தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் துறை சித்ரவதை, விசாரணைக் கைதிகளின் மரணம், துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கைகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திம் கீழ் இனி பெற முடியாது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அரசியல் காரணங்கள், சாதிய மோதல்கள், போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதல் உள்ளிட்ட தகவல்களையும் ஆர்டிஐ-ன் கீழ் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அரசாணைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காவல் மரணங்கள் நடக்கின்றன. மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுகிறது.

கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல் துறை. நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டம் - ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது தமிழ்நாட்டை “போலீஸ் ஸ்டேட்டாக” மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி. இந்த உத்தரவை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Restrictions have now been imposed on providing certain information related to general law and order under the Right to Information (RTI) Act.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments