FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

என் காதலி, எத்தனை பேரைக் காதலித்துள்ளார்? ஆர்டிஐ-யிடம் கேள்வி எழுப்பிய இளைஞர்!

காதலி, எத்தனை பேரைக் காதலித்துள்ளார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு கடும் கண்டனம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - file photo
பகிர்:

தனது முன்னாள் காதலி, எத்தனை பேரைக் காதலித்துள்ளார்? என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி 97 மனுக்கள் தாக்கல் செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், கடந்த 2021-2024 ஆண்டுகளில் அங்குள்ள கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. சந்தோஷின் நடத்தை காரணமாக அந்தப் பெண் அவரிடமிருந்து விலகிச் சென்றுள்ளார். இருப்பினும், செல்போன், கடிதம் மூலம் சந்தோஷ் தொந்தரவு செய்து வந்ததால், அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், தன்னுடைய முன்னாள் காதலி தற்போது யாரை காதலிக்கிறார்? இதற்கு முன் எத்தனை பேரை காதலித்துள்ளார்? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? அவர் உயிரோடு இருக்கிறாரா? என்பன உள்ளிட்ட 1,886 கேள்விகளை எழுப்பி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள, பொது தகவல் அதிகாரிக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 97 விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த தகவல்களை வழங்கவில்லை என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக சந்தோஷ், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி, தகவல் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் விதமாகவும், அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் வகையிலும், எந்தவொரு பொதுநலனும் இல்லாமல் செயல்பட்டுள்ளதாக சந்தோஷுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சந்தோஷ் கோரிய எந்த தகவல்களையும் வழங்க முடியாது எனவும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய அவருக்கு ஓராண்டு தடை விதித்தும் உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம், சந்தோஷுக்கு மனநல ஆலோசனை வழங்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

summary

How many people has his girlfriend loved? RTI response strongly condemns the person who posed the question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.