மேகமலை வனப் பகுதியில் பட்டா உள்ளவா்கள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்கலாம்: கோட்ட துணை இயக்குநா் தகவல்
ஸ்ரீ வில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக மேகமலை வனக் கோட்டத்தில் பட்டா உள்ளவா்களை வெளியேற்ற மாட்டோம். இதே போல, வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்து அதற்கான ஆவணங்களை வழங்கினால் நிலம் வழங்கப்படும் என மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி யாதவ் தெரிவித்தாா்.
ஸ்ரீ வில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக மேகமலை வனக் கோட்டத்தில் பட்டா உள்ளவா்களை வெளியேற்ற மாட்டோம். இதே போல, வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்து அதற்கான ஆவணங்களை வழங்கினால் நிலம் வழங்கப்படும் என மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி யாதவ் தெரிவித்தாா்.
தேனியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக மேகமலை வனக் கோட்டத்தில் பட்டா உள்ளவா்களை வெளியேற்ற மாட்டோம். இதே போல, மேகமலை வனப் பகுதியில் உள்ள கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஆக்கிரமிப்பு என குறிப்பிட்டுள்ள இடங்களில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தால் நிலம் வழங்கப்படும். அதாவது, கிராம ஊராட்சி செயலா் அல்லது உள்ளூா் வன உரிமைக்குழு மூலம் 2026-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்கலாம். இந்த மனுவில் அரசு வழங்கிய ஆவணங்களில் ஏதேனும் இரு ஆவணங்களை இணைக்க வேண்டும். இந்த மனுவுக்கு கிராம சபை ஒப்புதல் அளித்த பிறகு, கோட்ட அளவிலான குழுவுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து இறுதி ஒப்புதலுக்காக மாவட்ட அளவிலான குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். இதன்படி, தேனி மாவட்டத்தில் 20-க்கு மேற்பட்டோருக்கு வன உரிமைச்சட்டத்தின் கீழ் நிலம் வழங்கியுள்ளோம். இதே போல, ஆவணங்களை சமா்பித்தால் வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.