மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!
மதுரையில் முதல்வர் விஜய்யின் சாலைவலம் பற்றி...
மதுரை விமான நிலையத்திலிருந்து ராஜாஜி அரசு மருத்துவமனை வரை சாலைவலமான முதல்வர் ச. ஜோசப் விஜய் சென்று கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் வாா்டில் நடைபெறும் தொடக்க விழாவில், குழந்தைகளுக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தங்க மோதிரத்தை அணிவித்து, இந்தத் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து இன்று காலை தனிவிமானம் மூலம் மதுரைக்கு முதல்வர் விஜய் சென்றடைந்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு முதல்வர் விஜய் பயணித்து வருகிறார்.
வழிநெடுங்கிலும் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டார். வேனின் மேலே நின்றவாறு தொண்டர்களுக்கு கையசைத்தார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். மாலை 4.30 மணியளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார்.
முதல்வரின் வருகையையொட்டி, மதுரை முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
chief Minister Vijay holds a roadshow in Madurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.