FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!

தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்.
பகிர்:

தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும், மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒருநாள் (செப். 30) கவன ஈா்ப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

தனியார் பேருந்து தொழிலை நம்பி 3 லட்சம் ஊழியர்கள் உள்ள நிலையில், தொழிலைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை (செப். 30) நள்ளிரவு வரை ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தனியார் பேருந்துகளின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக தனியர் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வருவாய், போக்குவரத்துத் துறைகளின் அமைச்சர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

summary

The private bus owners' association has announced that the strike has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments