முகப்பு
நாகப்பட்டினம்

பேருந்துகள் மோதல்; 20 போ் காயம்

கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் வெள்ளிக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

28 நவம்பர் 2026, 5:11 am
பேருந்துகள் மோதல்; 20 போ் காயம்
விபத்தில் முன் பக்கம் சேதமடைந்த அரசுப் பேருந்து.
பகிர்:

கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் வெள்ளிக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

திருவாரூரில் இருந்து தேவூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தும், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் கீழ்வேளூா் அருகே கானூா் என்கிற இடத்தில் நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் விஜயலட்சுமி, சசிகலா, மரகதம், மணிகண்டன், வசந்தா, சரவணன், கண்ணன், ராஜேந்திரன் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த காவல்துறையினா் விரைந்து வந்து, காயமடைந்தவா்களை மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதல்கட்ட விசாரணையில், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீா் உடல்நிலை குறைவால், அரசுப் பேருந்து நிலைதடுமாறி எதிரே வந்த தனியாா் பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.