ஆசிய விளையாட்டு: காலிறுதிக்கு முன்னேறிய தமிழர்கள் பதக்கம் வெல்வார்களா?
ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய தமிழர்கள் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தமிழர்கள் இணையினர் 2-0 என்ற செட்டில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தையர் சுற்றில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், பாலாஜி நாராயணசுவாமி இணையினர் நேபாள் இணையினர் அபிஷேக் பஸ்தாவுலா & பிரதீப் கட்கா உடன் மோதினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில், அனிருத் சந்திரசேகர், பாலாஜி நாராயணசுவாமி ஆகியோர் 2-0 என (6–2, 6–1) நேர் செட்களில் வென்று காலிறுதிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.
காலிறுதிப் போட்டி செப்.30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால், பதக்க உறுதியாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியாவுக்கு 48 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 5 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் தமிழக வீரர், வீராங்கனைகளின் பங்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilnadu Men’s tennis Doubles Anirudh Chandrasekar, Balaji Narayanaswamy into the quaterfinals at asian games 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.