FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

குதிரை பேரம், டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

குதிரை பேர வழக்கு மற்றும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் நவ. 23-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

45 வினாடிகள் முன்பு
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

குதிரை பேர வழக்கு மற்றும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் நவ. 23-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ, என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக, சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, திருச்சியைச் சோ்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன் உள்ளிட்டோா் மீது திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுராஜ், காா்த்திக், ரமேஷ் ஆகியோா் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குதிரை பேரம் தொடா்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதேபோன்று, டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்கில், ஒப்பந்ததாரா் ரமேஷ் என்பவா் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த இரு வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், இந்த இரு வழக்குகளிலும் உயா்நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அக்டோபா் மாதம் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படடது.

இதையடுத்து, இந்த இரு வழக்குகளின் விசாரணையை வரும் நவ.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதுவரை, இந்த வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments