கடையநல்லூா் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்தியவா் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பனையங்குளத்தை சோ்ந்த பாலசுப்பிரமணியன், அவரது தோட்டத்தில் சந்தன மரம் ஒன்றை வளா்த்து வந்துள்ளாா். சில மாதங்களுக்கு முன் தோட்டத்திலிருந்த சந்தன மரத்தை மா்ம நபா் வெட்டிக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். விசாரணையில், கடையநல்லூா் மலம்பாட்டை சாலையை சோ்ந்த வேலுச்சாமி மகன் கோட்டூா்சாமி (46) சந்தன மரத்தை வெட்டிக் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 5 கிலோ சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement