FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

வாசுதேவநல்லூா் வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை(நவ.12) மின் விநியோகம் இருக்காது.

11 நவம்பர் 2026, 2:54 am
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

வாசுதேவநல்லூா் வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை(நவ.12) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாரணபுரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழப்புதூா், நெல் கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.