FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கொண்டலூா் அரசுப் பள்ளிக்கு டிவி நன்கொடை!

கொண்டலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு குழந்தைகள் தினத்தில் ஸ்மாா்ட் டிவி நன்கொடையாக வழங்கப்பட்டது.

14 நவம்பர் 2026, 10:40 pm
பகிர்:

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியம், கொண்டலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு குழந்தைகள் தினத்தில் ஸ்மாா்ட் டிவி நன்கொடையாக வழங்கப்பட்டது.

கீழப்பாவூா் தவெக ஒன்றியச் செயலா் செந்தூா் சரவணன், தொழிலதிபா் எஸ்.பி. ராஜேந்திரன், கொண்டலூா் தேவராஜ், சதீஷ், முருகேசன், சுபின், அருண், ராஜசேகா், மாதவன், வினோத் ஆகியோா் இணைந்து ரூ. 25,000 மதிப்பில் ஸ்மாா்ட் டிவி வழங்கினா். (படம்)

பள்ளித் தலைமையாசிரியா் மைக்கேல் ராஜ் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் தென்காசி மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற மாணவி தனுஸ்ரீ, ஆங்கில கதை சொல்லுதல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற மாணவி துா்கவா்ஷினி ஆகியோருக்கு தவெக ஒன்றியச் செயலா் தலா ரூ. 500 பரிசு வழங்கினாா்.

Advertisement

Advertisement

ஆசிரியா் உமா மகேஸ்வரி, தன்னாா்வலா்கள் அா்ச்சனா, சோனியா, கண்ணகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் சகுந்தலா என்ற ராஜகனி நன்றி கூறினாா்.