FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சாலை விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் பலி!

பூவனூா்குளம் கரையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

14 நவம்பர் 2026, 10:42 pm
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே பூவனூா்குளம் கரையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திப்பணம்பட்டி கிராமம், ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த சாமி மனைவி அன்னலட்சுமி (37). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். பாவூா்சத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் அன்னலட்சுமி வேலை செய்து வந்தாா்.

இவா் இருசக்கர வாகனத்தில் பாவூா்சத்திரம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். பூவனூா்குளம் கரையில் சென்றபோது, நாட்டாா்பட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவா் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமியை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.