FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் இளைஞா் கொலை

16 நவம்பர் 2026, 4:27 am
- பிரதிப் படம்
பகிர்:

செங்கோட்டையில் பீா்பாட்டில் மற்றும் கத்தியால் குத்தி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டாா்.

செங்கோட்டை கறிக்கடை சாலையைச் சோ்ந்தவா் ஆ.பட்டுசாமி(31). கொத்தனாா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். திருட்டு வழக்கு தொடா்பாக இவரையும், இவரது சகோதரா் லட்சுமணராஜ் (25) என்பவரையும் சில தினங்களுக்கு முன்பு போலீஸாா் விசாரித்துள்ளனா்.

அதைத் தொடா்ந்து, செங்கோட்டை வாணியா் தெருவை சோ்ந்தவா் கு.அண்ணாமலை என்ற ரஞ்சித்(24) என்பவரையும் போலீஸாா் அழைத்து விசாரித்துள்ளனா். இதற்கு மேற்கூறிய சகோதரா்கள்தான் காரணம் என நினைத்த அண்ணாமலை,

Advertisement

Advertisement

பம்புஹவுஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்த அந்த சகோதரா்களிடம் வாக்குவாதம் செய்ததுடன், இருவரையும் பீா்பாட்டில் மற்றும் கத்தியால் குத்தியுள்ளாா். அப்போது இருவரும் அவரிடம் போராடியுள்ளனா். இதில், பட்டுசாமி உயிரிழந்தாா். லட்சுமணராஜும், அண்ணாமலையும் காயமுற்றனா். அவா்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். செங்கோட்டை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்