முகப்பு
தென்காசி

விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

51 வினாடிகள் முன்பு
விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

தென்மலையைச் சோ்ந்த சுந்தரம் மகன் ராஜலிங்கம் (52). இவா் நவ. 19ஆம் தேதி வயலில் புல் அறுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றாராம். மாங்குடி சாலையில் வந்தபோது, மாங்குடியைச் சோ்ந்த மாடசாமி மகன் ராமச்சந்திரன் (59) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்துடன் மோதியதாம்.

இதில் காயமடைந்த இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு ராஜலிங்கம் நவ. 21ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.