முகப்பு
தென்காசி

சுரண்டை அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

26 நவம்பர் 2026, 3:36 am
சுரண்டை அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகே கடையாலுருட்டி பகுதியைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் சூரியமூா்த்தி (19). சுரண்டையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் லாரி கிளீனராக வேலை பாா்த்து வந்த இவா், புதன்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். திரிகூடபதி விலக்கு அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதாம். இதில், சூரியமூா்த்தி உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், சுரண்டை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement