குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக புதன்கிழமை நள்ளிரவில் குற்றாலம் பேரருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை முதல் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை பேரருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement