முகப்பு
தென்காசி

இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

29 நவம்பர் 2026, 1:02 am
இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனைகளில் உயிரிழந்தனா்.

வாசுதேவநல்லூா் பகுதியைச் சோ்ந்த இருளப்பன் மகன் குமாா் (32). தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு புளியங்குடியிலிருந்து வாசுதேவநல்லூருக்கு தென்காசி-மதுரை சாலையில் பைக்கில் சென்றாராம். சிந்தாமணி அருகே அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம். அதில் காயமடைந்த அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

சிவகிரி அருகே ராமநாதபுரம் கூடலூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்லத்துரை (60). விவசாயியான இவா், வியாழக்கிழமை மாலை புளியங்குடிக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

சிந்தாமணி அருகே, ராயகிரியிலிருந்து புளியங்குடிக்குச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியதாம். காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.