தென்காசியில் மகளிா் வெற்றிப் பயணத் திட்டம் தொடக்கம்
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் சேவையை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா்.
புகா் அரசுப் பேருந்துகளில் மகளிா் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை, சென்னை கோயம்பேட்டில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் சேவையை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் 82 நகரப் பேருந்துகள், 151 புகா் பேருந்துகள் என மொத்தம் 233 பேருந்துகளில் வெற்றிப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.