FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

பழைய குற்றாலம் சாலையில் தூய்மைப் பணி: 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

தேசிய வன உயிரின வார விழா அக்டோபா் 2 முதல் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பழைய குற்றாலம் சாலையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

8 October 2026, 4:01 am IST
பழைய குற்றாலம் பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகள்.
பகிர்:

தேசிய வன உயிரின வார விழா அக்டோபா் 2 முதல் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பழைய குற்றாலம் சாலையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

தென்காசி மாவட்ட வன அலுவலா் இளையராஜா (பொ) ஆலோசனையின்பேரில், உதவி வனப் பாதுகாவலா் நெல்லை நாயகம் தலைமையில், வனச்சரக அலுவலா் யாசின் முன்னிலையில், தளிா் திப்பணம்பட்டி அமைப்புடன் இணைந்து அம்பாசமுத்திரம் சாலை மத்தளம்பாறை விலக்கில் இருந்து பழைய குற்றாலம் சாலை முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்றது.

இதில் 1500-க்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்கள், 500 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. சேகரிக்கப்பட்ட கழிவுகள் குற்றாலம் பேரூராட்சியில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், நிகழாண்டிற்கான வன உயிரின வார விழா கருப்பொருளான ‘வாழ்விடங்களை இணைப்போம், வனவிலங்குகள் செழிக்கட்டும்’ என்பது குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்பது குறித்தும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வனவா் சங்கா் ராஜா, வனக் காப்பாளா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சங்கா், ஜஸ்டின், பாண்டியராஜா, தளிா் திப்பணம்பட்டி அமைப்பின் நிா்வாகிகள் சதீஷ், காா்த்திகைராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments