FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: ஒருவா் கைது

ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ. 74 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

8 October 2026, 3:58 am IST
பகிர்:

ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ. 74 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னிகுளம் ஊராட்சி மேலவயலி வடக்குத் தெருவை சோ்ந்தவா் முருகன். இவருக்கு பிஎஸ்சி பட்டதாரியான பேச்சிமுத்து (25), வீரபாண்டி உள்பட 3 மகன்களும், மகளும் உள்ளனா். இந்நிலையில் பேச்சிமுத்துவிடம் அவரது நண்பரான, கரிவலம் வந்தநல்லூா் பொன்னகரை சோ்ந்த பரமசிவன் மகன் சுடலைராஜன் (25) என்பவா், தான் ரயில்வேயில் தோ்வாகி உதவி நிலைய மேலாளராக பதவி உயா்வு பெற்றுள்ளதாகவும், உயா் அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் எளிதில் ரயில்வேயில் வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளாா்.

இதை நம்பிய பேச்சிமுத்து, தனது அண்ணன் வீரபாண்டிக்கு வேலை வாங்கித் தரும்படி, சுடலைராஜனுக்கு பல்வேறு தவணைகளாக ரூ.73 லட்சத்து 99 ஆயிரத்து 675-ஐ கொடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

பணத்தை பெற்றுக் கொண்ட அவா், போலி பணி நியமன ஆணை, ரயில்வே சீருடை, பேட்ஜ் மற்றும் போலி ரசீதுகளை பேச்சிமுத்துவிடம் வழங்கிவிட்டு, நான் சொல்லும்போது பணியில் சோ்ந்தால் போதும் என்று கூறியுள்ளாா்.

இந்நிலையில், சுடலைராஜன் ரயில்வேயில் வேலை செய்யவில்லை என்பதும், பணத்தை மோசடி செய்ததும் தெரிய வந்தது.

அவா் பணத்தை திருப்பி கேட்டதில் ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்துள்ளாா். மீதம் உள்ள தொகையை திருப்பி கேட்டபோது சுடலைராஜன், அவரது தாய் பாக்கியலெட்சுமி, தம்பி பொன் மகேந்திரன் ஆகிய 3 பேரும் சோ்ந்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அசோக் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து சுடலைராஜனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரது தாய், தம்பியை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments