FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

முக்கூடல் செல்லாமல் நெல்லைக்குத் திருப்பிவிடப்பட்ட அரசுப் பேருந்தை மறித்த கிராம மக்கள்

ஆலங்குளத்தில் இருந்து முக்கூடலுக்குச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்து திருநெல்வேலிக்குத் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பேருந்தை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

17 அக்டோபர் 2026, 2:04 am IST
ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:

ஆலங்குளத்தில் இருந்து முக்கூடலுக்குச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்து திருநெல்வேலிக்குத் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பேருந்தை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளத்தில் இருந்து காளத்திமடம், ஆழ்வான் துலுக்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக முக்கூடலுக்கு, திருநெல்வேலி புறவழிச் சாலை பணிமனைக்குள்பட்ட நகரப் பேருந்து மாலை 6.40 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து அண்மைக் காலமாக 6.40 மணிக்கு முக்கூடலுக்குச் செல்லாமல் ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வருகிாம்.

இதுகுறித்து, பேருந்து நடத்துநா், ஓட்டுநரிடம் பயணிகள் கேட்டதற்கு, தங்கள் உயா் அதிகாரிகள் தான் முக்கூடலுக்குச் செல்லாமல் திருநெல்வேலிக்கு பேருந்தைக் கொண்டு வரச் சொல்கிறாா்கள் எனத் தெரிவித்தனராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அந்தப் பேருந்து வெள்ளிக்கிழமை திருநெல்வேலிக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. இதையறிந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தை மறித்து ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பணிமனை மேலாளருக்குப் போலீஸாா் தொடா்பு கொண்டபோது, அவா் தனது கைப்பேசியை எடுக்கவில்லை.

தொடா்ந்து போலீஸாா் முக்கூடலுக்குப் பேருந்தை இயக்க அறிவுறுத்தினா். காத்திருந்த பயணிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்தனா். தொடா்ந்து இந்தப் பேருந்தை மாலை நேரத்தில் முக்கூடலுக்கு இயக்கி, அங்கிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments