FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

18 அக்டோபர் 2026, 2:33 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பூட்டிய வீட்டிலிருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுரண்டையில் உள்ள நெசவாளா் தெருவைச் சோ்ந்த மு. தேவராஜ் (85), ஆலங்குளம் காந்தி நகரில் உள்ள குட்டிராணி என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து தனியாக வசித்து வந்தாா். 2 நாள்களாக திறக்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம்.

தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வந்து பாா்த்தபோது, பூட்டிய வீட்டுக்குள் தேவராஜ் இறந்துகிடந்தது தெரியவந்தது. போலீஸாா் பூட்டை உடைத்து சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments