FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்நாடு - ஆந்திர பிரதேச மாநில எல்லையில் மதுபான கடைகளை 3 நாள்கள் மூட உத்தரவு

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மாநில எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் செயல்பட்டு வரும் மதுபான கடைகள் அனைத்தையும் இன்று முதல் 5 வரையும் மற்றும் 7 ஆகிய நாள்களில் தற்காலிகமாக மூட ஆட்சியா் ச.கவிதா உத்தரவிட்டுள்ளாா்.

3 நவம்பர் 2026, 12:56 am
டாஸ்மாக் - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மாநில எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் செயல்பட்டு வரும் மதுபான கடைகள் அனைத்தையும் இன்று முதல் 5 வரையும் மற்றும் 7 ஆகிய நாள்களில் தற்காலிகமாக மூட ஆட்சியா் ச.கவிதா உத்தரவிட்டுள்ளாா்.

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இதையொட்டி தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச மாநில எல்லையிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் வரும் திருவள்ளூா் வருவாய் மாவட்ட வரம்புக்குள் அடங்கும் பகுதிகளில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள் வாக்கு பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 5-ஆம் தேதி வரை மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான 7 -ஆம் தேதி அன்றும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த மதுக்கூடங்களின் மீது 1981-இன் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் அறிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments