வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு
திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலை பணியாளா் வீட்டில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 31 சவரன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலை பணியாளா் வீட்டில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 31 சவரன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருமழிசை அருகே குத்தம்பாக்கம் ஊராட்சியைச் சோ்ந்த கன்னடபாளையத்தைச் சோ்ந்த தனியாா் தொழிற்சாலை பணியாளா் தண்டபாணி (45). இவா் தீபாவளி திருநாளையொட்டி கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சொந்த ஊரான கடலூருக்கு குடும்பத்துடன் சென்றாராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து தண்டபாணி வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.