ரூ. 51 லட்சத்தில் வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு
திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கவிதா, புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கவிதா, புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளம் வெட்டும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். மாணவா்களுடன் அமா்ந்து ஆசிரியா்களின் கற்பித்தல் முறையையும் ஆய்வு செய்தாா்.
வேணுகோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரேசபுரம் கிராமத்தில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.50.9 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டாா். அப்பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.
Advertisement
Advertisement
கூடல்வாடி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம், எடை மற்றும் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தாா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து இருப்பு மற்றும் மருத்துவப் பதிவேடுகளை ஆய்வு செய்த ஆட்சியா், பொதுமக்களுக்கு உரிய முறையில் மருத்துவச் சிகிச்சை வழங்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி உதவி செயற்பொறியாளா் கோமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள், முகமது அலி, ஆட்சியரின் நோ்முக எழுத்தா் (பள்ளிக்கல்வி) பவானி, பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.