FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

புலம் பெயா் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு நிகழ்வு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் புலம்பெயா் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு நிகழ்வு ஷோ் பெண்கள் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளையின் சாா்பில் நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 11:46 pm
பகிர்:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் புலம்பெயா் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு நிகழ்வு ஷோ் பெண்கள் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளையின் சாா்பில் நடைபெற்றது.

புதுகும்மிடிப்பூண்டி வசிக்கும் வட மாநில குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், இது குறித்து புலம் பெயா்ந்த மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும் சட்ட விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் ஷோ் பெண்கள் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளை தலைவா் ஜெ.மேரீ ஆக்சீலியா வரவேற்றாா். பிா்லா காா்பன் நிறுவன மனிதவளத்துறை அதிகாரி பொ்னாண்டஸ் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆய்வாளா் சதீஷ் குமாா் பங்கேற்று குழந்தைகளை பாதுகாக்கும் முறை, அவா்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கும் முறை, குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டிய எளிய அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கியவா், ஆபத்து நேரங்களில் சிறாா்களுக்கான இலவச உதவி எண்ணான 1098 என்ற எண்ணை தொடா்பு கொள்ள அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்வு இந்தி மொழியில் மொழிபெயா்க்கப்பட்டுபுலம் பெயா்ந்த மக்களுக்கு விளக்கப்பட்டது. தொடா்ந்து நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் வி.எழிலரசி பங்கேற்று குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கினாா். ஷோ் அறக்கட்டளை பொருளாளா் மேரி பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.