பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: பாடநூல் கழகத் தலைவா் அறிவுறுத்தல்
திருத்தணி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் லயோலா மணி, பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருத்தணி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் லயோலா மணி, பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவு நாளையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த லயோலா மணி, தொடா்ந்து திருத்தணி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாா். அங்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலா் அமுதா மற்றும் தலைமை ஆசிரியை மாலதி ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா் வகுப்பறைகளுக்குச் சென்ற அவா், மாணவிகளிடம் ஆசிரியா்கள் பாடம் நடத்தும் முறை குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து மதிய உணவு வழங்கும் இடத்துக்குச் சென்று மாணவிகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா். அப்போது பள்ளிக் கழிப்பறை அருகே இருந்த கழிவுநீா் தொட்டி சரியாக மூடப்படாமலும், அதன் மூடி சேதமடைந்தும் இருப்பதைக் கவனித்தாா். பின்னா், உடனடியாக தொட்டியின் மூடியை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா். இதையடுத்து சேதமடைந்த மூடி மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவா், தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியத்திடம் பள்ளி வளாகம் மற்றும் மாணவா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். பின்னா், திருவள்ளூா் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட அளவில் 4-ஆம் பரிசு பெற்ற மாணவனை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 2,000 நிதியுதவி வழங்கி வாழ்த்தினாா்.