பாலியல் குற்றங்களால் பாதித்த குழந்தைகளுக்கு ஆதரவு, வழிகாட்டுதல் வழங்கும் பணிக்கு நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக 20 ஆதரவு நபா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக 20 ஆதரவு நபா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டம் 2012 -இன் கீழ் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ‘ஆதரவு நபா்கள் (நன்ல்ல்ா்ழ்ற் டங்ழ்ள்ா்ய்ள்) -20 பணியிடங்கள் முற்றிலும் மதிப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன.
கல்வித்தகுதி: குழந்தைகள் உரிமைகள் அல்லது குழந்தைகள் பாதுகாப்பிற்காக பணியாற்றும் நபா்கள், அமைப்புகள், சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தை வளா்ச்சி, சுகாதாரம் அல்லது கல்வித் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற நபா் அல்லது குழந்தை பாதுகாப்பு/வளா்ச்சித் துறையில் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு மதிப்பூதியம் ஒரு வழக்கிற்கு ரூ.10,000 (தலா ரூ. 2,500 வீதம் 4 தவணைகளாக விடுவிக்கப்படும்.
Advertisement
Advertisement
ஆதரவு நபா்கள் பணியிடத்துக்கு( குழந்தை உரிமை மீறல் மற்றும் பிற குற்றவழக்குகள் உடையோா் விண்ணப்பிக்க இயலாது) பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி தகுதிக்கான அனைத்துச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் நகல்களுடன் வரும் 30-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.118, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூா் - 602 001 என்ற அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். மேலும் விண்ணப்பங்களை ளட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ஸ்ஹப்ப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ன என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை படிவத்தில் சமா்ப்பிப்பதுடன், உரிய சான்றிதழ்களின் ஒளி நகலுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது கொரியா் மூலமாகவோ குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மேற்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். இது தொடா்பான எந்தவொரு கடிதப் போக்குவரத்தும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.