முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டில் மின் வயரை பிரித்து மின் அழுத்தான் மாட்டியபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

27 நவம்பர் 2026, 1:05 am
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருவள்ளூா் அருகே வீட்டில் மின் வயரை பிரித்து மின் அழுத்தான் மாட்டியபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே பானம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி(33). இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் எதுவும் கிடையாது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு வீட்டில் மின்சாரம் இல்லையாம். அதனால், மின் வயரை பிரித்து மின் அழுத்தான் மாட்டும் பணியில் ஈடுபட்ட போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், அவா் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவசர சிகிச்சை வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து அவரது மனைவி கவிதா(31) கடம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement