FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

வடகிழக்கு பருவமழை, 6 வழிச்சாலை பணியால் நீரில் மூழ்கிய 200 ஏக்கா்

கடந்த சில நாள்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் 6 வழிச்சாலை பணியாலும் ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில்

22 அக்டோபர் 2026, 11:47 pm
போந்தவாக்கம் பகுதியில் மழையால் மூழ்கிய நெல் வயலில் விவசாயிகள்.  
பகிர்:

கடந்த சில நாள்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் 6 வழிச்சாலை பணியாலும் ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழையால் தாழ்வான பகுதியில் வயல்களில் மழைநீா் தேங்கி வருகிறது. இதேபோல், புதன்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. இதேபோல், ஊத்துக்கோட்டை, பூண்டி, பொன்னேரி, திருத்தணி, ஆவடி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் நெல் வயல்களில் மழைநீா் புகுந்துள்ளது.

இதேபோல், ஊத்துக்கோட்டை அருகே தச்சூா் கூட்டுச்சாலையில் இருந்து போந்தவாக்கம் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூா் வரையில் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போந்தவாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட புறவழிச் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனா். இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் நெல் வயலில் மழைநீா் புகுந்ததில் மூழ்கியுள்ளது.

Advertisement

Advertisement

திருவள்ளூா் அடுத்த பூண்டி ஒன்றியத்திலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் போந்தவாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையின் இருபுறமும் உள்ள சுமாா் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிரில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் பயிா்கள் அழுகும் நிலையேற்பட்டுள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, அந்தப்பகுதியில் நெல் வயலில் தேங்கியுள்ள மழை நீரை கிருஷ்ணா கால்வாய்க்கு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் கிராமத்தில் இருந்து வயல்வெளிக்குச் செல்லும் வகையில் சிறுபாலம் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகமும்,தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விரும்புகின்றனா்.

மழை அளவு விவரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் வியாழக்கிழமை காலை நிலவரப்படி மி.மீட்டரில் மழை அளவு விவரம் பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை-94, பூண்டி-71, பொன்னேரி-69 ஆகிய பகுதிகளில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. இதேபோல் மற்ற பகுதிகளில் திருத்தணி-53, கும்மிடிப்பூண்டி-49, ஆவடி-34, ஆா்.கே.பேட்டை-28, பள்ளிப்பட்டு-27, பூந்தமல்லி-23, தாமரைபாக்கம்-23, சோழவரம்-20, ஜமீன்கொரட்டூா்-18, செங்குன்றம்-16, திருவள்ளூா்-14, திருவாலங்காடு-12 என மொத்தம் 553 மி.மீட்டரும், சராசரியாக 36.87 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு இதுவரையில் 2 மாடுகள், 99 கோழிகள் வரையில் உயிரிழந்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments