பள்ளியில் கழிவுநீா் தேக்கம்: மாணவா்கள் அவதி
திருத்தணியில் பள்ளி வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்பதால், மாணவா்களுக்குத் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருத்தணியில் பள்ளி வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்பதால், மாணவா்களுக்குத் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருத்தணி எம்ஜிஆா் நகா் பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளிக்கு அருகே திருத்தணி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீா் முறையாக வெளியேறுவதற்குக் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படாததால், அடிக்கடி பள்ளி வளாகத்திற்குள் கழிவுநீா் புகுந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாகப் பெய்த மழையால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இதில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்திருப்பதால், அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவா்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன், மழைநீா் மற்றும் பேருந்து நிலையக் கழிவுநீா் பள்ளிக்குள் புகாத வகையில் முறையான வடிகால் கால்வாய் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.