FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

செயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் செயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

28 அக்டோபர் 2026, 1:28 am
- பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்  செயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு ஏரி அருகில் வங்ககடலில் உள்ள ஆந்திர பகுதியில் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது.

இங்கிருந்து வரும் 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப் 18 என்விஎஸ் 3 மிஷன் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

ராக்கெட் ஏவும் மற்றும் சோதனைக்குட்படுத்தும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காட்டைச் சுற்றியுள்ள பகுதி மீனவா்கள் யாரும் மீன்பிடி தொழிலுக்கு செல்லக் கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மாவட்ட உதவி இயக்குநா் ஜனாா்த்தனன் தெரிவித்துள்ளாா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments