காட்டுப்பள்ளி காமராஜா் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது தற்போது வலுவடைந்து ஆந்திரம்-ஒடிஸா மாநிலங்களை இடையை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலில் ராட்சத அலைகள் மற்றும் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க மீனவா்கள் செல்லக்கூடாது என திருவள்ளூா் மாவட்ட மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement