ரூ.7,000 சலுகையுடன் அறிமுகமாகிறது ‘ரியல்மீ நியோ 3டி’ ஸ்மார்ட்போன்
ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
ரியல்மீ நிறுவனம் சமீப காலமாக இந்தியாவில் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக ‘ஜிடி நியோ 3டி’ ஸ்மார்ட்போனை ரூ.7,000 சலுகை விலையுடன் இந்தியாவில் நாளை(வெள்ளிக்கிழமை) அறிமுகம் செய்கிறது.
‘ஜிடி நியோ 3டி’ சிறப்பம்சங்கள் :
Advertisement
Advertisement
* 6.62 இன்ச் அளவுகொண்ட அமோல்ட் எச்டி திரை
* ஸ்னாப்டிராகன் 880 எஸ்ஓசி பிராசசர்
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி பொருத்தப்பட்டுள்ளது.
* 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி
* ஆண்டிராய்ட் 12 - ரியல்மி இயங்குதளம்
இந்தியாவில் இதன் விற்பனை விலை ரூ.37,500 ஆக இருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். நிறுவனத் தரப்பிலிருந்து ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் அன்று வாங்குபவர்களுக்கு ரூ.7,000 சலுகை விலையாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.