முகப்பு
வணிகம்

ஓப்போ ’ஏ78 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு?

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஏ78 5ஜி’ ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

Updated On : 18 ஜனவரி 2023, 6:30 pm IST
பகிர்:

ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஏ78 5ஜி’ ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்லும் ஓப்போ நிறுவனம்  புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

குறிப்பாக, நாட்டில் 5ஜி சேவைகள் மெல்ல அதிகரித்து வருவதால் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையும் அதிகரிக்கிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஒப்போ நிறுவனம் தன் புதிய தயாரிப்பான  ’ஏ78 5ஜி’ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

’ஓப்போ ஏ78 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.56 இன்ச் ஐபிஎஸ் திரை

* மீடியா டெக் டைமென்சிட்டி 700

* உள்ளக நினைவகம்(ரேம்) 8 ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி

* ஆண்ட்ராய்டு 13, கலர் ஓஎஸ்  11

* பின்பக்கம் 50 எம்பி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா 

* 5000 எம்ஏஎச் அளவுள்ள பேட்டரி   

* வண்ணம்: வெள்ளை, நீலம், கருப்பு

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை ரூ.18,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்திலும் ஓப்போ விற்பனையங்களிலும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments