எல்டிஐ மைண்ட்ட்ரீ நிகர லாபம் உயர்வு!
ஐ.டி. சேவை நிறுவனமான எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிகர லாபம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 4.1 சதவீதம் அதிகரித்து, ரூ.1,152.3 கோடியாக அதிகரித்துள்ளது.
புதுதில்லி: ஐ.டி. சேவை நிறுவனமான எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிகர லாபம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 4.1 சதவீதம் அதிகரித்து, ரூ.1,152.3 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,106.5 கோடியாக இருந்தது.
ஜூன் 2022 காலாண்டில் ரூ.7,644 கோடியுடன் ஒப்பிடும்போது, நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 13.83 சதவீதம் அதிகரித்து ரூ.8,702 கோடியாக இருந்தது என்று நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.