ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பாங்க் ஆப் பரோடா திட்டம்!
பாங்க் ஆப் பரோடா: தொழில்நுட்ப குழு ஊழியர்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த திட்டம்!
மும்பை: பொதுத் துறையைச் சேர்ந்த பாங்க் ஆப் பரோடா வங்கியானது் அடுத்த இரண்டு ஆண்டுகளில், தொழில்நுட்ப குழு ஊழியர்களின் எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
குழு தலைமையில் விரைவில் புதிய ஊழியர்களைக் பணியமர்த்தல் செய்ய உள்ளதாகவும், திறமையாளர்களின் பக்கவாட்டில் பணியமர்த்தல் நடைபெறும் என்று அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தெபாதத்தா சந்த் தெரிவித்தார்.
தற்போது 1,500 ஊழியர்களைத் தவிர, ஐடி செயல்பாட்டில் வங்கியில் ஒப்பந்த ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வல்லுநர்களின் வலிமையை கணிசமாக அதிகரிக்கும்.
Advertisement
Advertisement
தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் சுமார் ரூ.2,000 கோடி முதலீடு் செய்ய போவதாகவும், வரும் காலத்தில் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.
2024-25 நிதியாண்டில் 60 புதிய கிளைகளைத் திறக்க வங்கி இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.