அசோக் லேலண்ட் நிறுவனம் 
வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை 6% உயா்வு

Din

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலேண்டின் மொத்த விற்பனை கடந்த மாா்ச்சில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 24,060-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 22,736 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2024 மாா்ச்சில் 21,187-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த மாா்ச்சில் 6 சதவீதம் அதிகரித்து 22,510-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 14,387-லிருந்து 12 சதவீதம் உயா்ந்து 16,082-ஆக உள்ளது. எனினும், இலகுரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 6,800-லிருந்து 5 சதவீதம் குறைந்து 6,428-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT