FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஹோண்டா காா்கள் விற்பனை உயா்வு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் 2 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 22 ஏப்ரல் 2025, 3:59 am IST
பகிர்:

புது தில்லி: முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் 2 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7,228-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 7,071 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 6,860-லிருந்து 4,656-ஆகச் சரிந்துள்ளது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் விற்பனை 1,26,151-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,24,173-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments