தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!
தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
தங்கத்தின் விலை சவரனுக்கு வியாழக்கிழமை ரூ. 320 குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் ரூ. 160 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று, மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு சவரனுக்கு ரூ. 1,120 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 140 அதிகரித்து ரூ. 9,290-க்கும் ஒரு சவரன் ரூ. 74,320 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
summary